Thursday, 16 September 2021

 

ஒரு ஊரில் அழகே பாடல் வரிகள்

 


குழு : ஷி இஸ்
பான்டஸி ஷான
நான் நாநா ஹோ
ஸ்வீட் அஸ் ஹார்மோனி
ஷான நான் நாநா ஹோ
ஹோ நோ ஒன் நோஸ் ஷி
இஸ் மிஸ்டரி ஷான நான்
நாநா ஹோ ஹோ பில்ஸ்
யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி
வோகு வோகு யேகி யே ஹே

ஆண் : லா லாலா
லாலா லா லா லாலா
லா லா லா லாலா லா
லா லாலா லா லா லாலா
லா லா லா
குழு : து ரூ லா லா
லா லா டு பி டு டு

ஆண் : ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சையம்
போலிருக்கும் எதிலும்
வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை
ஈர்ப்பாளே முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

ஆண் : ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : மரகத சோம்பல்
முறிப்பாளே புல்வெளி
போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி
பேசும் போதிலே காற்றிலும்
வீணை உண்டு என்று தோன்றுமே

ஆண் : அவள் கன்னத்தின்
குழியிலே சிறு செடிகளும்
நடலாம் அவள் கன்னத்தின்
குழியிலே குழு : அழகழகாய்
ஆண் : சிறு செடிகளும்
நடலாம் குழு : விதவிதமாய்
ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே

ஆண் : ஒரு ஊரில்
அழகே அழகே ஒரு
ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே ஹே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : மகரந்தம் தாங்கும்
மலர் போலே தனியொரு
வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த
மடிப்பில் விசிறி
வாழைகள் தோள்களில்
ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்

ஆண் : அவள் கடந்திடும்
போது தலை அனிச்சையாய்
திரும்பும் அவள் கடந்திடும்
போது குழு : நிச்சயமாய்
ஆண் : தலை அனிச்சையாய்
திரும்பும் குழு : அவள் புறமாய்
ஆண் : என்ன சொல்ல என்ன
சொல்ல இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே

விஷ்லிங் : ………………………

குழு : நோ ஒன் நோஸ்
ஷி இஸ் மிஸ்டரி
ஷான நான் நாநா

ஆண் : அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
குழு : பார்க்கையிலே
ஆண் : பல வருட பரிட்சையம்
குழு : போலிருக்கும்
ஆண் : எதிலும் வாஞ்சைகள்
தான் இருக்கும் முதலாம்
பார்வையிலே மனதை
ஈர்ப்பாளே முதல் முதல்
பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

 

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...