Saturday, 28 August 2021

 

ஆசை ஆசை பாடல் வரிகள்


 

பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

பெண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

பெண் : ………………………….

பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

பெண் : தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது

ஆண் : ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது

பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது

ஆண் : திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது

பெண் : ………………………….

பெண் : ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை

ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது

பெண் : கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது

ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது

பெண் : புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது

ஆண் : ………………………….

பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

ஆண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது
பெண் : மணலாய் விரிந்தேன்
நான் இப்பொழுது சுவடை
பதித்தாய் நீ இப்பொழுது

பெண் : ………………………….

 

 

Kan Irandil Song Lyrics In Tamil



 

ஆண் : ‎‏கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே
எதுவும் பிடிக்கலியே

ஆண் : உன்னுடைய பார்வையிலே
என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி

ஆண் : ‎‏கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல
என் நெஞ்சுகுழி தள்ள
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
கண்ணுமுன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட

ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
கால் இரண்டும் ரெக்க கட்டி
மேலே கீழே பரபரக்க
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே

ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்

ஆண் : உன் முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டையில
நின்னு போச்சு என் மூச்சு
பஞ்சு மெத்த மேகம்
அது செஞ்சு வெச்ச தேகம்
நீ தூரத்தில நின்னா கூட
பொங்கிடுது என் முகம்

ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்
குத்தி குத்தி கொன்னவளே
சிக்கி கிட்ட என் மனச
ஊற வெச்சு துவச்சவளே
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே
எதுவும் பிடிக்கலியே

ஆண் : உன்னுடைய பார்வையிலே
என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி

ஆண் : ‎‏கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே.

 

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...