Thursday, 16 September 2021

 

1. யார் என்ன சொன்னாலும் பாடல் வரிகள்

 


ஆண் : தந்தானே
தந்தானே தானே
பூமியில தேவதைகள்
தேவதைகள் உங்கள்
புன்னகையால் மனம்
வீசிடுங்கள் வீசிடுங்கள்

ஆண் : வானத்திலே
லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே
வந்து பொழியுங்கள்

ஆண் : மழை சிந்தும்
தேன் துளியில் அட
இல்லாத சுவை தான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு
விடை தான்

ஆண் : உண்மைகள்
எங்கே உண்மைகள்
பொய்களுக்குள்ளே
பொய்களுக்குள்ளே
நன்மைகள் எங்கே
தீமைகளுக்குள்ளே
தீமைகளுக்குள்ளே

ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்

ஆண் : இந்த குடும்பம்
ஒரு கோவில் அதில் நீ
தானே சாமி இங்க நிலவுகள்
பல கோடி ஆனால் நீ தான்
பூமி

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

ஆண் : சுற்றமும்
முற்றமும் யாருமே
இன்றி வாழ்ந்திடும்
வீட்டினில் தெய்வம்
இல்லை

ஆண் : பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி வாழ்ந்திடும்
வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை

ஆண் : பிரிந்தே நாம்
வாழ்கின்ற போதிலும்
நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே அழகாய்
பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே

ஆண் : இன்னும் ஓர்
ஒரு ஜென்மம் அது
கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம்
தேவை

ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்

ஆண் : துன்பங்கள்
துயரங்கள் யார் தந்த
போதிலும் இன்பங்கள்
மட்டும் நாம் சேர்த்து
வைப்போம்

ஆண் : தெய்வங்களாய்
நீங்கள் வாழ்கின்ற
வீட்டினில் தேவர்களாய்
நாங்கள் காத்திருப்போம்

ஆண் : மண்ணில் சிறு
பறவை வாழ மரம் தான்
இடம் கொடுத்திடும் மரம்
தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழித்திடும்

ஆண் : இன்னோர் ஒரு
உலகில் நான் வளர்ந்தாலும்
கூட இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்

ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்

ஆண் : இந்த குடும்பம்
ஒரு கோவில் அதில் நீ
தானே சாமி இங்க நிலவுகள்
பல கோடி ஆனால் நீ தான்
பூமி

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

 2. பச்சைக் கிளிகள் தோளோடு பாடல் வரிகள்


 

ஆண் : { பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை } (2)

ஆண் : சின்ன சிறு
கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன
அன்பில்தானே ஜீவன்
இன்னும் இருக்கு

ஆண் : பட்டாம்பூச்சிக்
கூட்டத்துக்கு பட்டா
எதுக்கு அட பாசம்
மட்டும் போதும்
கண்ணே காசு பணம்
என்னத்துக்கு

ஆண் : பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை

ஆண் : அந்த விண்ணில்
ஆனந்தம் இந்த மண்ணில்
ஆனந்தம் அடி பூமிப் பந்தை
முட்டி வந்த புல்லில் ஆனந்தம்

ஆண் : வயலின் சுத்தம்
ஆனந்தம் மழையின்
சத்தம் ஆனந்தம் அட
மழையில் கூடச்
சாயம்போகா வானவில்
ஆனந்தம்

ஆண் : வாழ்வில் நூா்
ஆனந்தம் வாழ்வே
பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம்
ஆனந்தம்

ஆண் : பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை

ஆண் : உன் மூச்சில்
நான் வாழ்ந்தால் என்
முதுமை ஆனந்தம் நீ
இன்னொரு பிறவியில்
என்னைப் பெற்றால்
இன்னும் ஆனந்தம்

ஆண் : பனி கொட்டும்
மாதத்தில் உன் வெப்பம்
ஆனந்தம் என் காது
வரைக்கும் கம்பளி
போத்தும் கருணை
ஆனந்தம்

ஆண் : சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

ஆண் : { பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை } (2)

              3. எங்கள் வீட்டில் எல்லா பாடல் வரிகள்


 

ஆண் : { எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் :  ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் :  ஹா ஹா } (2)

ஆண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

ஆண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் :  ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் :  ஹா ஹா

பெண் : ………………………

ஆண் : பாடும் பறவை
கூட்டங்களே பாசத்தின்
மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்

பெண் : ………………………

ஆண் : சிலுவைகளை நீ
சுமந்து மாலைகள் எமக்கு
சூட்டினாய் சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம் வானத்தை
போல மாறினாய்

ஆண் : விழியோடு நீ
குடையாவதால் விழிகள்
நனைவதில்லை நெஞ்சில்
பூமழை

பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் :  ஹா ஹா
பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் :  ஹா ஹா

பெண் : ………………………

ஆண் : எங்கள் சொந்தம்
பார்த்தாலே சொர்க்கம்
சொக்கி போகுமே எங்கள்
வீட்டில் பூத்தாலே பூவின்
ஆயுள் கூடுமே

ஆண் : இரண்டு கண்கள்
என்றாலும் பார்வை என்றும்
ஒன்றுதான் உருவத்திலே
தனித்தனிதான் உள்ளம்
என்றும் ஒன்றுதான்

ஆண் : ஒரு சேவல்
தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் :  ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் :  ஹா ஹா

பெண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

ஆண் & பெண் : எங்கள்
வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை
பெண் :  ஹா ஹா
ஆண் & பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் :  ஹா ஹா

பெண் : ………………………

 4. ஆசை ஆசையாய் இருகிறதே பாடல் வரிகள்

 


குழு :  ரி ரி
ரி நீ ரி
ரி ரி நீ

ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

ஆண் : நம்மை காணுகிற
கண்கள் நம்மோடு சேர
கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற
இன்பம் அந்த சொர்க்கம்
தன்னை மிஞ்சும்

ஆண் : ஒரு நாள் கூட
இங்கு வரமாகும் உயிர்
எங்கள் வீடாகும் சுகமாய்
என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

குழு :  ரி ரி
ரி நீ

ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

குழு : ஆஆ….. ஆஆ……

ஆண் :  நம் தாயின்
முகத்தில் ஒரு கோடி
கடவுள் தரிசனம் நாங்கள்
பார்த்திடுவோம்

ஆண் : தீபங்கள் கோடி
நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல
மாற்றிடுவோம்

ஆண் : அன்னைக்கு
பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே

குழு :  ரி ரி
ரி நீ ரி
ரி ரி நீ

ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

ஆண் :  பல நூறு வண்ணம்
ஒன்றாக சேரும் ஓவியம் போல
சேர்ந்திருப்போம்

ஆண் : வரலாறு எல்லாம்
நம் பேரை நாளை சொல்வதை
போல வாழ்ந்திருப்போம்

ஆண் : எங்களுக்குள்ளே
வளைந்திடுவோம் நாணலை
போல்தானே நம் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும்
சந்தோசம்

குழு : { ரி ரி
ரி நீ ரி
ரி ரி நீ } (2)

 5. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் பாடல் வரிகள்


 

அவரவர் வாழ்க்கையில்

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்

திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம் 
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும் 


நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே

அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில்

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ம்ம் ம்ம்
அந்த நினைவுகள் நெஞ்சினில்

 திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் ம்ம் ம்ம்

 

காற்றும் கூட எங்களுடன் 
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும் 
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்
கத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்

தாயின் மடியில் தினம் இருந்து 
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து 
சிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்

ஐந்தெழுத்து புது மொழியை 
அறிய வைத்தாள் என் அன்னை 
அண்ணன் தங்கை இருவருமே 
நேசம் கொண்டு தமிழ் மண்ணை


நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே

அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில்

 ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ம்ம் ம்ம்
அந்த நினைவுகள் நெஞ்சினில்

திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் ம்ம் ம்ம்

 

அன்னை ஊட்டிய பிடி சோற்றில் 
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால் 
பத்து கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிகூடம் தந்ததில்லை 
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல் வேறொன்றை

கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை 
கருப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை

சேகரித்து வைப்பதற்கு தேவை

என்று எதுவும் இல்லை
இறைவனுக்கும் எங்களுக்கும்

 இடைவெளிகள் இருந்ததில்லை


நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே

அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில்

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்

 திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம் 

கனவினில்தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும் 
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

 

 

6. ஆனந்த குயிலின் பாடல் வரிகள்

 


ஆண் : { ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே } (2)
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது
உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா

பெண் : ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே

ஆண் : பூமி எங்கும் கண்டதில்லை
பாசத்தை உன்போலே

பெண் : வேறெதுவும் தேவை
இல்லை அன்புக்கு முன்னாலே

ஆண் : நெஞ்சுக்குள்ளே பூ மலரும்
வீட்டுக்குள் வந்தாலே

பெண் : நிம்மதியில் கண்வளரும்
பாட்டுக்கள் தந்தாலே

ஆண் : இந்த சொந்தங்கள் போதுமே
எங்கள் இன்பங்கள் கூடுமே

பெண் : அன்பென்னும் தீபம்
ஏற்றிய வீடும் தெய்வத்தின்
ஆலயம்தான்

ஆண் : வீடு என்றால்
மோட்சம் என்றால் வீடு
கண்டோம் நேசத்திலே

பெண் : ………………………………..
ஆண் : அடேங்கப்பா
பெண் : ………………………………..

பெண் : அன்பினிலே அன்பினிலே
ஆலயம் கண்டேனே அண்ணன்களின்
கைகளிலே ஜீவனும் நான்தானே

ஆண் : பாசத்திலே வாசம்
தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும்
வீணையும் நீதானே

பெண் : சிலா் வேதம்
பாடலாம் சிலா் கீதை
தேடலாம் நான் கண்ட
வேதம் நான் கண்ட கீதை
அண்ணனின் வாா்த்தைகள் தான்

ஆண் : வானில் நிலா
தேய்ந்திடலாம் பாச
நிலா தேய்ந்திடுமோ

பெண் : ஆனந்த
குயிலின் பாட்டு
ஆண் : தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே
பெண் : பூக்களில்
நனையும் காற்று
ஆண் : தினம் எங்களின்
தோட்டத்திலே

பெண் : கிளிகளின் கூண்டுக்குள்ளே
புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே

ஆண் : கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா

ஆண் & பெண் : ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே

 

7. Sengathire Song Lyrics in Tamil


 

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : உயிர் வேதனை
தரும் வார்த்தையை உறவே
நீ பேசுவதோ குயில் வீட்டையே
குடை சாய்த்திட புயல் காற்று
வீசுவதோ விதியின் ஆட்டம்
ஓயாதே எதுவும் விளையாட்டே
வாடாதே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : அன்னை மடி மீது
தூங்கையிலே தொல்லைகளும்
ஏதடா தந்தை நம்மை
தாங்கும் வேளையிலே
கைகளிலே வானடா

ஆண் : தெரு மண்ணோடு
நாம் நடந்தாலுமே
அழுக்கில்லாமலே
இருந்தோமடா நிலை
கண்ணாடியில் சிறு கீறல்
போல் பல துண்டாயின்று
உடைந்தோமடா வயதாகும்
போது நாமே வழி மாறி
போகிறோமே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : மொட்டு விடும்
பூவை காட்டுவது
எப்பொழுதும் வாசமே
உள்ளவரை வாழ தேவை
எது உண்மையிலே பாசமே

ஆண் : எதை சொன்னாலுமே
தவறாகவே பொருள்
கொள்வோரிடம் நலம் ஏதடா
உறவில்லாமலே ஒரு ஜீவனும்
உயிர் வாழாதென உணர்வோமடா
வயலோடு வாழ நாமே வரப்பாக
மாறுவோமே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே..

 

8.Ore Oru Oorukulle Song Lyrics in Tamil

 


ஆண் : ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு அய்யா ஒரே
ஒரு அய்யாவுக்கு ஒரே
ஒரு அம்மா ஒரே ஒரு
அம்மா பெத்தா ஒரே ஒரு
பொண்ணு அவ பொண்ணு
இல்ல பொண்ணு இல்ல
கடவுளோட கண்ணு

ஆண் : ஐயா இருக்காரே
ஐயா பாசம் இல்லாம
பலரு பைத்தியமா
ஆனதுண்டு பாசத்தினாலே
இவரு பைத்தியமா ஆவதுண்டு

ஆண் : காத்தடிச்சா மகளுக்கு
காவலுக்கு நிப்பாரு காச்சடிச்ச
சூரியன கைது செய்ய பாப்பாரு

ஆண் : மக மட்டும் மக
மட்டும் உசுரா மத்ததெல்லாம்
மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு

ஆண் : ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு அய்யா ஒரே
ஒரு அய்யாவுக்கு ஒரே
ஒரு அம்மா

ஆண் : அக்கா இருக்காங்களே
எங்க அக்கா பூச்சிய பாத்தாலே
சிலரு புத்தி மாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா
பூத்தொடுத்து நிப்பாங்க

ஆண் : கொண்டதுவும் ஒரு
குழந்தை கொடுத்தவணும்
ஒரு குழந்தை தொலையட்டும்
கழுதைங்கன்னு தொல்லை
எல்லாம் பொறுப்பாங்க

ஆண் : எங்கக்கா எங்களுக்கு
பரிசா எங்கக்கா மனசோட
இமயமலை சிறுசு

குழு : தன நானா தும்
தனும் தனும் தனும்
தன நானா தும் தன
தும் தனனும் தன
நானா தும் தன தும்
தனனும் தன நானா
திர தும் தனனும் திகுரு
தன தும் தன தும்
தனனும் தன நானா
திர தும் தன தும்
தனனும் தகிட தன
தும் தன தும் தனனும்
தன தும் தன தும் தனனும்

ஆண் : அம்மா இருக்காளே
எங்க அம்மா பொறந்து வரும்
போதே சிலரு வரம் வாங்கி
வருவாங்க பொறந்து வரும்
போதே சிலரு வரம் தரவே
வருவாங்க

ஆண் : வரமா வந்தம்மா
வாஞ்சை உள்ள தங்கம்மா
சிட்டெரும்ப நசுக்காத
சிங்கம் தான் எங்கம்மா

ஆண் : மறு பிறவி
உண்டுன்னா எனக்கென்ன
வேணும் இந்த மகளுக்கும்
தாய்க்கும் நான் மகனாகவேணும்

 9.Manvasam Veesum Enga Ooru Song Lyrics in Tamil

 

மண் வாசம் வீசும்
எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்கு
பேரு நல்ல பேரு

எங்காத்தா ஒரு கோயில்
எங்கப்பா அதில் சாமி
இதுதானா எங்களோட பூமி

மண் வாசம் வீசும்
எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்கு
பேரு நல்ல பேரு

எங்காத்தா ஒரு கோயில்
எங்கப்பா அதில் சாமி
எங்காத்தா ஒரு கோயில்
எங்கப்பா அதில் சாமி
இதுதானா எங்களோட பூமி

மண் வாசம் வீசும்
எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்கு
பேரு நல்ல பேரு

அஞ்சு பேரு அண்ணன் தம்பி
வாழும் இந்த வீடு
பாசத்துக்கு பஞ்சம் இல்லை
நாளும் சொல்லிப் பாடு

வெறும் காலில் நீங்க நடந்து
எங்க உசுர தாங்கி சுமந்து
வெறும் காலில் நீங்க நடந்து
எங்க உசுர தாங்கி சுமந்து
வாழும் இந்த காலம் பொற்காலம்

மண் வாசம் வீசும்
எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்கு
பேரு நல்ல பேரு

 

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...