Thursday, 5 August 2021

En Iniya Thanimaye Song Lyrics in Tamil

 

En Iniya Thanimaye Song Lyrics in Tamil


 

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

—BGM—

ஆண் : புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு

ஆண் : மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

ஆண் : உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது

ஆண் : மனிதரின் மொழி கேட்டுகேட்டு
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

—BGM—

ஆண் : அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு

ஆண் : கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு

ஆண் : என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்

ஆண் : உறவுகள் வந்து சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன்
முதல் முறையாய்

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

—BGM—

ஆண் : இதுவரை கற்கா கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்

ஆண் : இதுவரை காணா காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்

ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்

ஆண் : கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்

ஆண் : எனை துயிலென அணைத்திடு தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே
தனிமையே

ஆண் : என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

—BGM—

ஆண் : என் இனிய தனிமையேஓஹோ
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...