Tuesday, 17 August 2021

 

வாயா என் வீரா பாடல் வரிகள்



ராபகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழச்சாச்சு

ஆசை நோய் ஆறாதய்யா
மசங்கு விழி கசங்குதய்யா
கை புடிக்க நீயும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

மூச்சுக்காத்துல மாருதம் போல
மாமா வா மார்போடு பாஞ்சிக்கோ
கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா

ராசாவ உன் ரோசா பூவும்
நான்தானே நெஞ்சில் என்னை வெதச்சுக்கோ
கொஞ்சம் அனைச்சுக்கோ
என்னை வளச்சுக்கோ தாராளமா

நீளாதோ நீ என்னை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீதான் என் சொந்தம்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பணிக்காத்தும் அனல்போல
கொதிக்குதே நதி துடிக்குதே
பரிதவிக்குதே பாயாமத்தான்

பாவை தாபம் யாருக்கு லாபம்
புயலோடு ஏலப்பொல உசுர் ஓடுதே
உன் கூடவே உன்னை தேடுதே ஓயாமத்தான்

வாழாதேபூங்கொடி காற்றே வருடாமல்
விண்வெளியே வானவில்போல்
உன்னால் மாறாதோ

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...