Tuesday, 10 August 2021

Azhagana Kolaikaari song Lyrics in Tamil

 


 

ஆண் : அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே

ஆண் : அசைந்தாடும் சிலையா
நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை
நீ அள்ளி சென்றாயே

ஆண் : ஒரு நொடியில்
உன்னாலே எரிமலையில்
வெந்தேனே மறு நொடியில்
தன்னாலே பனி துளியில்
நின்றேனே

ஆண் : அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே

ஆண் : என்னை நானும்
தேடி தேடி காணாமல்
போனேன் உன்னை காணும்
நேரம் எல்லாம் நான் என்னை
கண்டேன்

ஆண் : இமை ரெண்டும்
கண்ணை குத்தும் விந்தைகள்
பார்த்தேன் மழை தூறல் தீயாய்
தீண்டும் மாயங்கள் கண்டேன்

ஆண் : பூவின் மீது இடியை
போலே நெஞ்சில் உந்தன்
எண்ணம் மோத நூறாய்
சுக்கு நூறாய் நானே ஆகி
போனேன்

ஆண் : இரவுகளில் ஏதேதோ
கலவரத்தில் வேர்த்தேனோ
இருதயத்தில் பூ பூக்கும்
அதிசயத்தை பார்த்தேனோ

ஆண் : அழகான கொலைகாரி
சுகமான சதிகாரி உயிரே
போகாமல் நீ என்னை
கொன்றாயே

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : மலர் ஒன்று மனதை
கிள்ள நான் வாடி நின்றேன்
மயில் தோகை புயலை வீச
நான் ஆடி போனேன்

ஆண் : ஆஹா கடிகார
முள்ளாய் உன்னை நான்
சுற்றி வந்தேன் கணம் நேரம்
மரணம் ஒன்றை கண் பார்க்க
கண்டேன்

ஆண் : ஏக்கம் தந்து தூக்கம்
தின்றாய் தாகம் தந்து தள்ளி
நின்றாய் தேளாய் கொட்டும்
தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்

ஆண் : தனிமையிலே நான்
நின்று கதறும் படி செய்தாயே
கனவுகளில் நீ வந்து கன்னி
வெடி வைத்தாயே

ஆண் : அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே

ஆண் : அசைந்தாடும் சிலையா
நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை
நீ அள்ளி சென்றாயே

ஆண் : ஒரு நொடியில்
உன்னாலே எரிமலையில்
வெந்தேனே மறு நொடியில்
தன்னாலே பனி துளியில்
நின்றேனே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...