Monday, 5 July 2021

தொடு தொடு எனவே வானவில் பாடல் வரிகள்

தொடு தொடு எனவே வானவில் பாடல் வரிகள்



பெண் : தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்

ஆண் : விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி
விண்வெளி ஏறும்

பெண் : மன்னவா ஒரு
கோயில் போல் இந்த
மாளிகை எதற்காக

ஆண் : தேவியே என்
ஜீவனே இந்த ஆலயம்
உனக்காக

பெண் : வானில் ஒரு புயல்
மழை வந்தால் அழகே எனை
எங்கனம் காப்பாய்

ஆண் : கண்ணே உன்னை
என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள்
அடைப்பேன்

பெண் : சாத்தியமாகுமா
ஆண்நான் சத்தியம் செய்யவா

பெண் : தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்

பெண் : இந்த பூமியே
தீா்ந்து போய்விடில்
என்னை எங்கு சோ்ப்பாய்

ஆண் : நட்சத்திரங்களை தூசு
தட்டி நான் நல்ல வீடு செய்வேன்

பெண் : நட்சத்திரங்களின்
சூட்டில் நான் உருகிப்போய்விடில்
என் செய்வாய்

ஆண் : உருகிய துளிகளை
ஒன்றாக்கி என் உயிா் தந்தே
உயிா் தருவேன்

பெண் : ஹே ராஜா
இது மெய்தானா

ஆண் :  பெண்ணே தினம்
நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான்
பாய் விாிப்பேன் என்னை

பெண் : நான் நம்புகிறேன்
உன்னை தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்

ஆண் : விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி
விண்வெளி ஏறும்

பெண் : நீச்சல் குளம் இருக்கு
நீரும் இல்லை இதில் எங்கு
நீச்சலடிக்க

ஆண் : அத்தா் கொண்டு
அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க

பெண் : இந்த நியதியில்
அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு

ஆண் : காற்று வந்து உன்
குழல் கலைத்தால் கைது
செய்வதென ஏற்பாடு

பெண் : பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்

ஆண் : ஹே ராணி அந்த
இந்திரலோகத்தில் நான்
கொண்டு தருவேன் நாள்
ஒரு பூ வீதம்

பெண் : உன் அன்பு
அது போதும்

பெண் : தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில்
அழைக்கின்ற நேரம்

ஆண் : விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி
விண்வெளி ஏறும்

பெண் : மன்னவா ஒரு
கோயில் போல் இந்த
மாளிகை எதற்காக

ஆண் : தேவியே என்
ஜீவனே இந்த ஆலயம்
உனக்காக

பெண் : வானில் ஒரு புயல்
மழை வந்தால் அழகே எனை
எங்கனம் காப்பாய்

ஆண் : கண்ணே உன்னை
என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள்
அடைப்பேன்

பெண் : சாத்தியமாகுமா
ஆண்நான் சத்தியம் செய்யவா

  

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...