Wednesday, 30 June 2021

உனக்காக வாழ நினைக்கிறேன் பாடல் வரிகள்

 

உனக்காக வாழ நினைக்கிறேன் பாடல் வரிகள்


 

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் : உனக்காக…..உனக்காக…..

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

குழு : ஆஹ்ஹ்ஹ…………

ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே

ஆண் : உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண் : ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண் : நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

பெண் : பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் : உனக்காக…..உனக்காக…..

பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...