Sunday, 10 October 2021

 

தமிழன் என்று சொல்லடா பாடல் வரிகள்


 

பெண் : ……ஆஅ…..ஆஅ…..
ஹா…..….னா…..
ஆஆ…….ஆஆ……ஆஅ….னா
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….

ஆண் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..

ஆண் : …..
பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணை தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று

ஆண் : வேற்று மொழி சொற்கள் எல்லாம்
கேட்டு கொண்டே வந்தேனே
என் தமிழில் ஏதோ ஒன்று

ஆண் : பிரிந்திடும் வரை
இதன் பெருமைகள் எதுவும்
அறிந்திடவில்லை நெஞ்சம்

ஆண் : மறுபடி பாதத்தினை
நான் பதிக்கும் பொழுது
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்

ஆண் : நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..} (2)

ஆண் : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா….} (2)

ஆண் : பீசா பர்கர் உண்டு வந்தேன்
பாஸ்தா தின்றும் வந்தேனே
இட்டிலியில் ஏதோ ஒன்று

ஆண் : ஏதோ ஒன்று……

ஆண் : ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன்
ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே
நம் பறையில் ஏதோ ஒன்று

ஆண் : ஏதோ ஒன்று……

ஆண் : உறவுகள் என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டுபிடிக்க
வேறு இடம் மண்ணில் இல்லை

ஆண் : ….மொழி வெறும் ஒலி இல்லை
வழி என்று உரைத்த
வேறு இனம் எங்கும் இல்லை

ஆண் : நரம்புகள் அனைத்திலும்
அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம்தான்

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர்தான்

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..} (2)

ஆண் : கோட்டு அதை கலட்டி விட்டு
பேன்ட் அதை கொளுத்திபுட்டு
வேட்டியை நீ மடிச்சுக்கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண் : சகதியில் கால விட்டு
நாத்து நட்டும் தாளம் இட்டு
எட்டு கட்ட பாட்டு கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண் : ஆயிரம் ஆண்டின் முன்னே
சித்தர் சொன்னதெல்லாமே
இன்றுதான் நாசா சொல்லும்

ஆண் : நிலவை முத்தமிட்டு
விண்கலத்தில் ஏறி
தமிழோ விண்ணை தாண்டி வெல்லும்

குழு : கிழவிகள் மொழி
அனுபவ உளி
ஆண் : அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அறிவு

குழு : குமரிகள் விழி
சிதறிடும் ஒளி
ஆண் : அதில் உண்டு பூமி பந்தின்
மொத்த அழகு

ஆண் : ஏழு கோடி இதயத்தில்
ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது
ஒரே நெருப்பு

ஆண் : உலகினில் ஒளி தர
அதை பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே
தனி சிறப்பு

குழு : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா….} (2)

ஆண் : {தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா…..} (2)

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...