Tuesday, 12 October 2021

சொல்லாமலே யார் பார்த்தது பாடல் வரிகள்


        சொல்லாமலே யார் பார்த்தது பாடல் வரிகள்

 


பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
பூத்தது மழை சுடுகின்றதே
அடி அது காதலா தீ குளிா்கின்றதே
அடி இது காதலா இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா

ஆண் : …………………………………..

குழு : நெஞ்சத்தை தொட்டு
தொட்டு காதல் சொல்லும்
பச்சைக்கிளி மொட்டுக்கள்
என்ன சத்தம் மெல்ல வந்து
சொல்லடி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது

குழு : …………………………………..

ஆண் : மல்லிகைப்பூ வாசம்
என்னை கிள்ளுகின்றது அடி
பஞ்சுமெத்தை முள்ளை போல
குத்துகின்றது

பெண் : நெஞ்சுக்குள்ளே
ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்
கொட்டுகின்றது

ஆண் : கண்ணே உன்
முந்தானை காதல் வலையா
உன் பாா்வை குற்றால சாரல்
மழையா

பெண் : அன்பே உன்
ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா

ஆண் : இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்
………………………………………….

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது

குழு : …………………………………..

பெண் : கண்ணுக்குள்ளே
உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை
வந்து சுற்றிக்கொண்டது

ஆண் : என்னை விட்டு
தென்றல் கொஞ்சம்
தள்ளிச்சென்றது நான்
உந்தன் பேரை சொன்னபோது
அள்ளிக்கொண்டது

பெண் : அன்பே நான்
எந்நாளும் உன்னை
நினைத்து புல்மீது
பூவானேன் தேகம் இளைத்து

ஆண் : வில்லோடு அம்பாக
என்னை இணைத்து சொல்லாத
சந்தோச யுத்தம் நடத்து

பெண் : உலக அதிசயத்தில்
ஒன்று கூடியது நம் காதலா

ஆண் : …………………………………..

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
பூத்தது மழை சுடுகின்றதே
அடி அது காதலா தீ குளிா்கின்றதே
அடி இது காதலா இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
சொல்லாமலே யாா் பாா்த்தது

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...