Wednesday, 8 September 2021

 

யாரோ யாருக்குள் இங்கு பாடல் வரிகள்


 

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஆண் : ஓஹோஹோ
நின்றாய் எங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா ஹே ஹே

ஆண் : யாரோ
பெண் :  யாருக்குள் இங்கு யாரோ
ஆண் : ம்ம் ம்ம் யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெண் : விடை இல்லா ஒரு கேள்வி
ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : உந்தன் ஆடை காயப் போடும்
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன்
நான் தவம் பண்ணினேன்

பெண் : ஆஹ ஹஹ
கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய்விடும்

ஆண் : காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன்தான்

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால்தான்
அன்பே வா….ஹா

ஆண் : யாரோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : யாருக்குள் இங்கு யாரோ
பெண் : அஹஆஹா
ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...