Friday, 13 August 2021

 

Vizhamale Irukka Mudiyuma Song Lyrics In Tamil


 

F: மபஸா மபநீ....
F:
மப ஸா நீப மா ரீ ரீ...
என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று

கைகள் கோர்த்து என் தோள் சாயும்
தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே
விழுந்து எழுகிறேன்
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே
M:
நிஜம் தா....ன் நிஜம் தா....ன்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல....
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே
M:
இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன

என்ன சக்தியோ
இவள் பக்கமாக என்னை இழுக்கும்
காந்த சக்தியோ
-----
🌹🌷🌹🌷🌹-----
F:
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திர கோலோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது
மங்கையின் உடலோ
-----
🌹🌷🌹🌷🌹-----
M:
காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்
F:
காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்
M:
ஏணி மேலே ஏறும்போது
காதல் பாம்பு தீண்டினால்

விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
F:
நிஜம் தா....ன் நிஜம் தா....ன்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல....
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

M:
இவள் மூச்சு காற்றை கேக்குதென்தன்

வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது
உஷ்ண மண்டலம்

F:
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால்
ஈரமண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே
கோடி சஞ்சலம்
M:
சேர்ந்திருந்தால் ஏகாதசி
F:
சேலைக்குதான் ஒரே குஷி
M:
சேர்ந்திருந்தால் ஏகாதசி
F:
சேலைக்குதான் ஒரே குஷி
M:
வயது வந்து வலையை விரிக்கும்
மாட்டிகொண்டு நீ ரசி

F:
விழாமலே இருக்க முடியுமா
M:
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
F:
நிஜம் தா....ன் நிஜம் தா....ன்
M:
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கலை
F:
விழாமலே இருக்க முடியுமா
M:
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...