Wednesday, 11 August 2021

Suthipoda Venama Song Lyrics in Tamil



பெண் : சுத்திப்போட
வேணாமா கண்ணு பட்டு
போச்சு இந்த ஜோடி
சூப்பர்ன்னு ஊருக்குள்ள
பேச்சு

பெண் : வயலுக்குள் போற
சனம் எல்லாம் பச்ச
நெல்லாக நம்ம பேரை
நடவு செய்யுதய்யா

பெண் : சந்தையிலே
கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம நம்ம
சேதி வாங்கி போகுதையா

ஆண் : அட ஆத்தங்கரையிலே
களத்து மேட்டுல நம்ம கதைய
பேசி தான் காத்தே வீசுது

ஆண் : சுத்திப்போட
வேணாமா கண்ணு பட்டு
போச்சு இந்த ஜோடி
சூப்பர்ன்னு ஊருக்குள்ள
பேச்சு

ஆண் : மகளா மருமகளா
என் வீட்டுக்கு வருவ
விளக்கா குத்து விளக்கா
நீ வெளிச்சம் வீசுவ

பெண் : புருஷன் தோளில
நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள நான்
புண்ணியம் சேமிப்பேன்

ஆண் : அழகா என்ன
அதட்டி நீ கட்டளை
போடுவ குளிச்சா தலை
துவட்டி நீ முத்தமும்
வாங்குவ

பெண் : தெனமும் தெனமும்
நான்தான் வந்து வெத்தல
மடிக்கணும் பாதி கடிச்சி நீ
தான் மிச்சம் எனக்கு
கொடுக்கணும்

ஆண் : அடி இப்படி ஒரு
ஜோடியானு உலகமும்
கண்ணு வைக்கணும்

ஆண் : சுத்திப்போட
வேணாமா கண்ணு பட்டு
போச்சு இந்த ஜோடி
சூப்பர்ன்னு ஊருக்குள்ள
பேச்சு

குழு : …………………………

ஆண் : அடியே இளம்
கொடியே உன் மடியில்
இடம் கொடு முடிஞ்சா
உன் மார்பில் கொஞ்சம்
முனங்க வழி கொடு

பெண் :  இரவு நேரம்
வந்தா உன் மெத்தையில்
இடம் கொடு விடியும் நேரம்
ஆனா என் சேலைய நீ கொடு

ஆண் : கனியே மச்ச கனியே
உன் கன்னத்தின் ருசி கொடு
கடைஞ்ச வெள்ளி சிலையே
உன் கழுத்தில் மனம் கொடு

பெண் : உதட்டில் கொடுத்த
முத்தம் அத திருப்பி தான்
கொடு வெட்கமும் எனக்கு
வந்தா நீ இரண்டு தான் கொடு

ஆண் : எங்க அப்பன் ஆத்தா
ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்னா
பெத்து கொடு

பெண் : சுத்திப்போட
வேணாமா கண்ணு பட்டு
போச்சு இந்த ஜோடி
சூப்பர்ன்னு ஊருக்குள்ள
பேச்சு

பெண் : வயலுக்குள் போற
சனம் எல்லாம் பச்ச
நெல்லாக நம்ம பேரை
நடவு செய்யுதய்யா

பெண் : சந்தையிலே
கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம நம்ம
சேதி வாங்கி போகுதையா

 


No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...