உயிரே என் உயிரே பாடல் வரிகள்
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
ஆண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்…..
இதயமும் உன்னை கேக்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்
பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய்
கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலலையா
இன்னும் என்னை புரியலையா
ஆண் : நான் சிரித்து
மகிழ்ந்து சிலிர்க்கும்
வரங்கள் நீ கொடுத்தாய்
நான் நினைத்து
நினைத்து ரசிக்கும்
கனத்தை நீ அளித்தாய்
பெண் : எங்கேயோ உன் முகம்
நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்
ஆண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
பெண் : என்னருகில் நீ இருந்தால்
தலை கால் புரியாதே….
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
குழு : ஆஅ…..ஆஅ….
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ…
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம்
கொடுத்த நிலவா…ஆ……
ஆண் : உன்னுடன் நடக்கையிலே…
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
பெண் : நீ பேசும் வார்த்தை
சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று
மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
ஆண் : நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
பெண் : ம்ம்ம்…
ஆண் : நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி
பெண் : உயிரே என் உயிரே
என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்கிறதே
ஆண் : ஓ…. ஒரு நிமிடம்
ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே….
பெண் : எங்கேயோ உன் முகம்
நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா
பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்
குழு : தாரா தர தாரா

No comments:
Post a Comment