கோவக்காரக் கிளியே பாடல் வரிகள்
ஆண் : கோவக்காரக் கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…ஏ
ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…
ஆண் : ஏதோ ஏதோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா…
ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…
ஆண் : ஏ… சூரியகாந்திப் பூவப்போல
முகத்த திருப்புறியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல
செதரி ஓடுறியே
பெண் : ஏ அழகா நீயும்
இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய
என்ன தொறத்துறியே
ஆண் : மயிலாப்பூரு மயிலே
ஒரு இறகுபோடம்மா
பெண் : என் சொந்த ஊரு மதுரை
அட தள்ளி நில்லையா
ஆண் : உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல
சரிதான் போடி புள்ள
பெண் : மேயாத ஆடு இல்ல
மேயாட்டி புல்லும் இல்ல
சவடால் தேவையில்ல
ஆண் : ஏனோ ஏனோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா…
ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…
பெண் : ஆஆஹா…
சித்திரமாச வெயிலப்போல
சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா
என்ன சுத்துறியே
ஆண் : ஏய் பத்தரமாத்துத்
தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல
முறுக்கா இருக்கிறியே
பெண் : ஏய்… பத்திரம் போட்டகையால்
ஒரு பதியம் போடைய்யா
ஆண் : பட்டா நீயும் தந்தா
நான் பயிரே வைப்பேனே
பெண் : பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல
காதல் இதுதானா
ஆண் : கண்ணாடி பாக்கவில்ல
முன்னாடி நீயும்மில்ல
காதல் இதுதானா
பெண் : ஓ ஏதோ ஏதோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா
பெண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா
ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

No comments:
Post a Comment