Tuesday, 13 July 2021

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil

 

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


 

ஆண் : ஆஅ…..ஆஅ…..………..

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

ஆண் : மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது……….
அடங்காத நாடோடி காற்றல்லவா

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

ஆண் : விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத சுகம்
தோன்றும்….

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...