Tuesday, 13 July 2021

நீயே நீயே நானே பாடல் வரிகள்

 

நீயே நீயே நானே பாடல் வரிகள்


 

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே

ஆண் : ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே தேங்க் யூ

ஆண் : உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே

ஆண் : என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே

ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்

ஆண் : உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே

ஆண் : உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே

ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்

ஆண் : வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க

ஆண் : புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி
நீயே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...