Punnagaiye Song Lyrics
குழு : புன்னகையே…..
சிறு பூங்கிளியே……
குழு : புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
குழு : புலி நீ…..நீ….
புயல் நீ……நீ….
விதியா……யா……ஆ…
சாதியா…..யா……ஆ….
குழு : அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
குழு : புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே…..
புலியாய் நீயும் மாறு
குழு : ……………………………
ஆண் : துணை ஒன்னு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே
எரியுற காட்டுக்குள்ளே
ஒரு எறும்பு வழி தேடுதே
ஆண் : பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு
பார்லிமென்டில் கேட்குமா
காட்டு சிங்கம் முயலக் காக்க
கடிதம் கொடுக்குமா
ஆண் : கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா….
ஆண் : துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா…..
ஆண் : புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
குழு : புலி நீ…..நீ….
புயல் நீ……நீ….
விதியா……யா……ஆ…
சாதியா…..யா……ஆ….
ஆண் : அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
ஆண் மற்றும் குழு : புன்னகையே
ஆண் : புயலாய் மாறும்போது
ஆண் மற்றும் குழு : சிறு பூங்கிளியே
ஆண் : புலியாய் நீயும் மாறு
ஆண் : இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா
ஆண் : இவளும் கூட இந்திய ரத்தம்
அரசமைப்பு சொல்லுது
ஈ எறும்பும் வாழத்தானே
பூமி உள்ளது
ஆண் : அருங்கம்புல்லும் நனைய தானே
அந்த மேகம் பெய்யுது
அழுத ஜாதி மீளத் தானே
அரசு உள்ளது
அழுத பிள்ளைதான்
பால் குடிக்குது
குழு : புன்னகையே
ஆண் : புயலாய் மாறும்போது
குழு : சிறு பூங்கிளியே
ஆண் : புலியாய் நீயும் மாறு
ஆண் மற்றும் குழு : புலி நீ…..நீ….
புயல் நீ……நீ….
விதியா……யா……ஆ…
சாதியா…..யா……ஆ….
ஆண் : அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
ஆண் மற்றும் குழு : புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

No comments:
Post a Comment