முதல் முறையாக பாடல் வரிகள்
ஆண் : முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை
அன்றே தோற்றேன்
ஆண் : ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்
ஆண் : நீதானே ….. நீ
தானே என் தாய்போல
தூங்காத சேய்போல
துரத்தாத பேய் போல
காதல் செய்தாய்
ஆண் : காதலில் விழ
மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை
கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
ஆண் : முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை
அன்றே தோற்றேன்
ஆண் : ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்
பெண் : ……………………
ஆண் : மஞ்சரியே மா
ரதியே நீயும் வா வா
வெளியே உன் இடையை
நான் அணைத்தே பார்ப்பேன்
மேலே வா கிளியே
பெண் : ஹா ஆஆ வா
என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
ஆண் : என்னை காணாமலும்
முகம் கோணாமலும் தினம்
நின்றாயடி என்னை வென்றாயடி
பெண் : நீ தினம் தினம்
என்னை வைய என்ன
குற்றம் நான் செய்ய
குழு : ……………………
பெண் : பகல் எல்லாம்
பார்க்காமல் ஏக்கம்
ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத
இனிக்கும் ராத்திரி
வேண்டும்
ஆண் : நீ வந்த பின்தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற
வேகம் என்னையும் மீறும்
பெண் : விரல் கோர்த்தாலென்ன
நிரல் கேட்டாலென்ன பழி
தீர்த்தாலென்ன பாதம்
பார்த்தாலென்ன
ஆண் : நான் காவலன்
தானே இருந்தும்
கொள்ளையிட
வந்தேனே
பெண் : ஹா ஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம் முதல்
முறையாக அன்பே
உன்னை பார்த்தேன்
என் முகவரியாக
உன்னை அன்றே
ஏற்றேன்
ஆண் : ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்
பெண் : ஓஹோ ஓ
ஓஓ ஓஹோ ஓ
ஓஓ

No comments:
Post a Comment