Tuesday, 13 July 2021

Kangal Neeye Song Lyrics in Tamil

 

Kangal Neeye Song Lyrics in Tamil


 

பெண் : கண்கள் நீயேகாற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயேவானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

பெண் : பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே

பெண் : எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

—BGM—

பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்….

பெண் : தோளில் ஆடும் சேலை
தொட்டில்தான் பாதிவேளை

பெண் : பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்
ஈடில்லா என்மகன்

பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

—BGM—

பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்

பெண் : போகும் பாதை நீளம்
கூரையாய் நீலவானம்

பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ

—BGM—

பெண் : கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை

பெண் : உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

—BGM—

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...