Tuesday, 13 July 2021

Aarariraro Song Lyrics in Tamil

 

Aarariraro Song Lyrics in Tamil

 


ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண் : வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

ஆண் : அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

—BGM—

ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே

ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓா் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

—BGM—

ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா

ஆண் : காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ

ஆண் : இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...