Wednesday, 14 July 2021

vijay song lyrics in tamil

Vijay song lyrics Tamil

1.            Neethane Neethane Song Lyrics



 

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : நீதானே
நீதானே என் கண்கள்
தேடும் இன்பம் உயிரின்
திரையில் உந்தன் பிம்பம்

ஆண் : நம் காதல்
காற்றில் பற்றும்
அது வானின் காற்றில்
எட்டும் நாம் கையில்
மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்

பெண் : ஆஆ……

பெண் : ஆஹா ஆஹா
ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே துளி மையல்
உண்டாச்சே

ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே
பெண் : ஆஆ
அவள் மையம்
கொண்டாச்சே

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய்
உடைத்தேன் நீயே

பெண் : ஆஆ
ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : ஆஆ
……………………………..

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே உன் ஆசை சொல்லலே

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
அழகே நீ செல்லாதே

ஆண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

ஆண் : நீதானே நீதானே

 

 

2.            Nillayo Song Lyrics in Tamil


 


 

ஆண் : மஞ்சள் மேகம்
ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் போ் கேட்டு பின்னே போகும்

ஆண் : செல்ல பூவே
நான் உன்னை கண்டேன்
சில்லு சில்லாய்
உயிா் சிதற கண்டேன்

ஆண் : நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன

ஆண் : கனவா கனவா
நான் காண்பது கனவா
என் கண் முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா
இவள் தென்நாட்டின் நான்காம் கடலா

ஆண் : நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன

ஆண் : செம்பொன் சிலையோ
இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள்
பெண்பால் வெயிலோ

ஆண் : நான் உன்னை போன்ற
பெண்ணை கண்டதில்லை
என் உயிாில் பாதி
யாரும் கொன்றதில்லை

ஆண் : முன் அழகால்
முட்டி மோட்சம் கொடு
இல்லை பின் முடியால்
என்னை தூக்கிலிடு

ஆண் : நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன

 

 

3.                               நீ நாதஸ்வரம் போல பாடல் வரிகள்

 


 

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா எட்டா
ஸ்வரம் நானா

குழு : ………………………………….

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா எட்டா
ஸ்வரம் நானா

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா
ஆண் : எட்டா ஸ்வரம் நானா

குழு : ………………………………….

ஆண் : உன் கண்கள்
ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து
பைரவி உன் கண்கள்
ரெண்டும் குழு : கல்யாணி
உன் சிாிப்போ
குழு : சிந்து பைரவி
நீ பாா்க்கும் போது
குழு : பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது
குழு : நீலாம்பாி

பெண் : நான் திருவையாறு
கச்சோி நீ தாளம் போடு
பித்தோி பல ராகங்கள்
சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

குழு : ………………………………….

பெண் : நீ பாக்கும்
போது நீ பாக்கும் போதே
பத்திக்குது சொந்த ஊரு
சிவகாசியா பேசும் போதே
ஜில்லுங்குதே உங்க ஊரு
சிரபுஞ்சியா

ஆண் : நீ நெருங்கும்
போதே கரன்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி நீயும் மணப்பாறையா

ஆண் : நீ கை கால் முளைச்ச
மத்தளமா உன்ன வாசிக்க
பின்னால் சுத்தனுமா நீ
ஹாா்மோனிய கட்டையம்மா
என் ஹாா்மோன் செய்யுது
சேட்டையம்மா

பெண் : நான் வாலிபம்
திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும்
பூனையடா நான் வயதுக்கு
வந்த வயலின் அட என்னை
மைனர போல வாசியடா என்னை
மைனர போல வாசியடா

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

 

4. Maduraikku Pogathadi Song Lyrics

 


குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (2)

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே

ஆண் : அடி ஒத்தையில
தனியாக மெத்தையில
தூங்காதே அக்கா மகன்
வாரான்டி அழைச்சுப் போக

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : சித்திரைனா வெயில்
அடிக்கும் காா்த்திகைனா
மழையடிக்கும் அடாா்
புடாா் கடாா் தடாா்
மாப்பிள்ளைதான் தங்கம்

குழு : ஆடியின்னா
காத்தடிக்கும் மாா்கழின்னா
ஹா ஹா ஹா டமால் டமால்
கபால் கபால் மாப்பிள்ளைதான்
சிங்கம்

ஆண் : ஹோமருதாணி
தோட்டத்துக்கே அட மருதாணி
யாரு வச்சா ஹோ தேரா தேரா
இவ வாரா வாரா

பெண் : ஹோ.. காட்டு
குயிலும் கட்டிக்கத்தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஹோய் ஜோரா ஜோரா வரும்
வீரா வீரா

ஆண் : நான் அக்கரையில்
இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சக்கரையா
இருப்பாளே ஆசையாலே

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா மருமக மருமக
வந்தாச்சம்மா இனி மாமியாா்
பதவிதான் உனக்காச்சம்மா

குழு : தமிழ்நாட்டு மன்மதனே
வாராய் பெண் மயங்க மயங்க
நடந்து நடந்து வாராய் நீ இந்திர
மகராஜனேவெற்றி
மாலைக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண

பெண் : ஹோ கெட்டிமேளம்
நாதஸ்வரம் அத சோ்ந்து
கேட்கும் நேரம் சுகம் டும்
டும் டும் டும் டுடு டுடு டும்
டும் டும் டும்

ஆண் : ஹோமஞ்சள்
குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம்
இன்னொரு பொறப்பு

பெண் : டும் டும் டும் டும்
ஆண் : டும் டும் டும்
டுடும் டுடும் டும் டும்
டும் டும்
பெண் : …………………………

பெண் : சந்திரனில் ஒரு
பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

பெண் : மதுரைக்கு
போக மாட்டேன்என்
மல்லிப்பூ உன் கையிலே..

ஆண் : தஞ்சாவூா்
போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

பெண் : எங்கும்
போகமாட்டேன் உன்
முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு
என் கண்ணால் சொக்க வைப்பேன்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (4)

 

5. சந்தோஷம் சந்தோஷம் பாடல் வரிகள்

 


ஆண் : { சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு } (2)
ஓஓஓஓஓ………….

ஆண் : வெற்றியை போலவே
ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்
துளி உள்ளதடி

ஆண் : குற்றம் சொல்லாமல்
ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால்
நீ இருட்டுக்கு வெள்ளையடி

ஆண் : தவறுகள் பண்ணி
பண்ணி திருந்திய பிறகுதான்
நாகாிகம் பிறந்ததடி

ஆண் : தவறுகள் குற்றம்
அல்ல சாிவுகள் வீழ்ச்சி
இல்ல பாடம்படி பவளக்கொடி

ஆண் : உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி
ஆனால் நாளை துன்பம் இல்லை

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ………….

ஆண் : ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையலையே

ஆண் : ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது
சாத்தியமா நன்மை என்றும் தீமை
என்றும் நாலு போ்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே

ஆண் : துன்பமென்ற சிப்பிக்குள்
தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே

ஆண் : கண்ணீா் துளியில்
வைரங்கள் செய்யும் கலைகள்
கண்டுகொள் காலுக்கு செருப்பு
எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

ஆண் : புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ………….

ஆண் : சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்

 

6. Sakkarai Nilave Song Lyrics

 


ஆண் : { சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே } (2)

ஆண் : மனம் பச்சை தண்ணி
தான் பெண்ணே அதை பற்ற
வைத்தது உன் கண்ணே என்
வாழ்க்கை என்னும் காட்டை
எாித்து குளிா் காய்ந்தாய்
கொடுமை பெண்ணே கவிதை
பாடின கண்கள் காதல் பேசின
கைகள் கடைசியில் எல்லாம்
பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

ஆண் : சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே

ஆண் : ………………………………….
காதல் என்ற ஒன்று அது
கடவுள் போல உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை

ஆண் : அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா

ஆண் : கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா

ஆண் : நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் மொட்டை
மாடி நிலவில் நான் குளிப்பேன்
என்றேன் எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

ஆண் : சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்

 

7. ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்




ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : உன் கூந்தல்
வகுப்பில் லவ் பாடம்
படிக்கும் மாணவனாய்
இருந்தேனே ஹே உன்
மேனி அழகை ஆராயும்
விஞ்ஞானி போல் இன்று
ஆனேனே

ஆண் : எல்லாம் சக்சஸ்
தான் ஆஹா இனிமேல்
கிஸ் கிஸ் தான் வா வா
வா வா என் வானம் சுழலும்
என் பூமி எல்லாமே நீதானே
ஹே வா வா வா

பெண் : நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் தைத்திருந்த
உறவொன்றை சொல்லும்
முன் அறிந்தாயே நன்றி
உயிரே

பெண் : உந்தன் மார்பில்
படர்ந்து விடவா உந்தன்
உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே இது ஒரு
பிரபம் நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

8. காதல் சொல்வது உதடுகள் அல்ல பாடல் வரிகள்




பெண் : லால லல லா லல
குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண் : லலலலா….
குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலா….

ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான்சகியே
குழு : ஓஹோ …..
ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
குழு : லலலலா….

பெண் : அடடடடா
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா

ஆண் : இது என்னடி
இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா

பெண் : எப்படி சொல்வேன்
புரியும் படி
ஆளை விடுடா
ஆண் : மன்னிச்சுக்கடி
காதல் செய்வேன்
கட்டளை படி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்

குழு : {ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்…} (2)

பெண் : படபடக்கும்
எனது விழிபார்த்து நடந்திக்கணும்
சொல்வது சரியா

ஆண் : தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா

பெண் : எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண் : சொல்லுகிறேன்
இப்பொதொரு முத்தம் குடுடி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலலா…..

குழு : ………………………………………………

 

 

9. Unnale Ennalum Song Lyrics in Tamil

 


பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
….. …….. …….. ……

ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெண் : உபயகுசல சிரஜீவன
பிரசுதபாித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
அதர ருச்சித மதுாிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யே

மமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம் விரகரகித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயே

ஆண் : விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்

பெண் : முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்

ஆண் : இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
ஓஹோ…. … 

ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெண்: ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்

ஆண்:  ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்

பெண்: காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே
… ……. …… 

பெண்: உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே

ஆண் & பெண்: சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
….. …….. …….. ……

 

 

 

 

 

 

10. உனக்காக வாழ நினைக்கிறேன் பாடல் வரிகள்


 

பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண்: உனக்காக…..உனக்காக…..

பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

குழு: ஆஹ்ஹ்ஹ…………

ஆண்: எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே

ஆண்: உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண்: ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண்: நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன்

பெண்: பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண்: உனக்காக…..உனக்காக…..

பெண்: உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...