அண்ணாத்த அண்ணாத்த பாடல் வரிகள்
குழு: காந்தம் கணக்கா
கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா
அண்ணன் பாரு அன்னன் பாரு
குழு: ஊரு பூரா தாறு மாறா
விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம்
தெறிக்க தெறிக்க
குழு: வீரத்துக்கு வேற பேரு
காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம்
கூட சேந்து நில்லு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையிலே உடையில
கொல கொல மாஸு
ஆண்: கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்லை
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
ஆண்: உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
குழு: தலைவா தலைவா
தலைவா தலைவா
பெண்கள்: கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
பெண்கள்: தாளடிக்கும் களத்துல
நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
பெண்கள்: வேரில் வீரம் தாங்கி
ஓங்கி வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி போரில்
மோதும் மறத்தமிழ் இனமடா
பெண்கள்: பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா
காவக்கார வாயா
ஆண்: காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
ஆண்: உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
ஆண்: நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
No comments:
Post a Comment