Saturday, 11 September 2021

 

Sengathire Song Lyrics in Tamil


 

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : உயிர் வேதனை
தரும் வார்த்தையை உறவே
நீ பேசுவதோ குயில் வீட்டையே
குடை சாய்த்திட புயல் காற்று
வீசுவதோ விதியின் ஆட்டம்
ஓயாதே எதுவும் விளையாட்டே
வாடாதே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : அன்னை மடி மீது
தூங்கையிலே தொல்லைகளும்
ஏதடா தந்தை நம்மை
தாங்கும் வேளையிலே
கைகளிலே வானடா

ஆண் : தெரு மண்ணோடு
நாம் நடந்தாலுமே
அழுக்கில்லாமலே
இருந்தோமடா நிலை
கண்ணாடியில் சிறு கீறல்
போல் பல துண்டாயின்று
உடைந்தோமடா வயதாகும்
போது நாமே வழி மாறி
போகிறோமே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே

ஆண் : மொட்டு விடும்
பூவை காட்டுவது
எப்பொழுதும் வாசமே
உள்ளவரை வாழ தேவை
எது உண்மையிலே பாசமே

ஆண் : எதை சொன்னாலுமே
தவறாகவே பொருள்
கொள்வோரிடம் நலம் ஏதடா
உறவில்லாமலே ஒரு ஜீவனும்
உயிர் வாழாதென உணர்வோமடா
வயலோடு வாழ நாமே வரப்பாக
மாறுவோமே

ஆண் : செங்கதிரே
செங்கதிரே தலை
தொங்கியது யாராலே..
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு
காலாலே..

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...