Sunday, 5 September 2021

Rain Song Lyrics In Tamil

 

1.  அடடா மழைடா பாடல் வரிகள்


 

குழு : ………………………………………

ஆண் : அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா

ஆண் : மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

ஆண் : மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

ஆண் : அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா

குழு : ………………………………………

ஆண் : பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

ஆண் : மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு

ஆண் : தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

ஆண் : உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டு
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்

ஆண் : இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்

ஆண் : பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு

ஆண் : போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

பெண் : அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா

பெண் : பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு

பெண் : குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு

 

2.  மேகம் கருக்குது பாடல் வரிகள்


 

குழு : { தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின் } (2)

குழு : { தக்குசிக்கு தக்குஜின் } (6)

குழு : தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : மேகம் கருக்குது
மின்னல் சிாிக்குது சாரல்
அடிக்கிறதே என் மேனியில்
ஆடிய மிச்ச துளிகள் நதியாய்
போகிறதே

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : நிலாவே வா வா
வா நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம்
அல்லவா உன் கரையை
சலவை செய்து விடவா

பெண் : புறாவே வா வா
வா பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம்
தர வா என் கூந்தலில் கூடு
செய்து தர வா

பெண் : காற்றை போல்
எனக்கு கூட சிறகொன்றும்
கிடையாது தடைமீறி செல்லும்
போது சிறை செய்ய முடியாது

பெண் : இளமையின் சின்னம்
இளம்பட்டு வண்ணம் இன்னும்
இன்னும் வளா்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

குழு : தர ரா ராரா
தர ரா ராரா தர ரா ரா
ராராராரே
{
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்குசிக் } (2)

குழு : தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்

பெண் : ……………………………..

பெண் : கனாவே வா வா
வா கண்ணோடு வா வா
வா விண்வெளியை அளந்திட
சிறகு கொடு விண்மீனில் எனக்கு
படுக்கை போடு

பெண் : மைனாவே வா வா
வா மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி
பரப்பு என் அழகை பறந்து
பறந்து பரப்பு

பெண் : பூமிக்கு ஒற்றை
நிலவு போதாது போதாது
அதனால் தான் இரண்டாம்
நிலவாய் நான் வந்தேன் இப்போது

பெண் : பூக்களில் தூங்கும்
பனிதுளி அள்ளி காலையில்
குளித்துக்கொள்வேன் விடிகிற
போது விடிகிறபோது வெளிச்சத்தை
உடுத்திக்கொள்வேன் ஹோய்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது

 

 

3.  நீ வரும் போது பாடல் வரிகள்


 

ஆண் : சின்ன மேகமே
சின்ன மேகமே சேத்து
வச்ச காசு வீசு சின்ன
மேகமே

குழு : சின்ன மேகமே
சின்ன மேகமே சேத்து
வச்ச காசு வீசு சின்ன
மேகமே

ஆண் : நட்ட தோட்டம்
வாடிபோச்சு நான் குளிச்சி
நாளுமாச்சு மின்னல் கும்மி
கொட்டி கொட்டு மேகமே

குழு : சின்ன மேகமே
சின்ன மேகமே சேத்து
வச்ச காசு வீசு சின்ன
மேகமே சின்ன
மேகமே

பெண் : …………………..

பெண் : விண்ணோடு
மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன
தூறல் என்ன எங்கே
தான் சென்றாயோ
இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது
போல் நில்லாமல்
போவாயோ தப்பாமல்
மீண்டும் சந்திப்பாயோ

பெண் : நீ வரும்
போது நான் மறைவேனா
நீ வரும் போது நான்
மறைவேனா தரிகிட
தரிகிட தா

பெண் : விண்ணோடு
மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன
தூறல் என்ன

பெண் : …………………..

பெண் : கொள்ளை
மழையே கொட்டி
விடுக பிள்ளை வயதே
மறுபடி வருக நிற்க
வேண்டும் சிற்பமாக
தாவணியெல்லாம்
வெப்பமாக

பெண் : குடைகளுக்கெல்லாம்
விடுமுறை விடுக்க குழந்தை
போலே என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

பெண் : நீ வரும்
போது நான்
மறைவேனா
நீ வரும் போது நான்
மறைவேனா…. தரிகிட
தரிகிட தா

பெண் : விண்ணோடு
மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன
தூறல் என்ன

பெண் : முத்து மழையே
முத்து மழையே மூக்கின்
மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

பெண் : உச்சி விழுந்த
நெற்றியில் ஆடி நெற்றி
கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு
பாடி அனுவனுவாகி முனு
முனு செய்தாயே

பெண் : நீ வரும்
போது நான்
மறைவேனா
ஹே ஹே
ஹே ஹே

பெண் : நீ வரும்
போது நான்
மறைவேனா
தரிகிட தரிகிட
தா

குழு : நீ வரும்
போது நான்
மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது நான்
மறைவேனா
ஆண் : ஹே ஹே
நீ வரும் போது நான்
மறைவேனா
ஆண் : ஹே ஹே
நீ வரும் போது நான்
மறைவேனா
ஆண் : ஹே ஹே

 

4.  நதியே நதியே காதல் பாடல் வரிகள்


 

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே அடி நீயும்
பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா
காரணம் நூறு கேட்டால்
சொல்வேனே நீ கேட்டால்
சொல்வேனே

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி நின்றால்
கடல் அல்லோ சமைந்தால்
குமரி மணந்தால் மனைவி
பெற்றால் தாய் அல்லோ

ஆண் : { சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : தினம் மோதும்
கரை தோறும் அட ஆறும்
இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே

ஆண் & பெண் : கங்கை
வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை
வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே

ஆண் : தினம் மோதும்
கரை தோறும் அட ஆறும்
இசை பாடும்

பெண் : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே

ஆண் : கங்கை வரும்
யமுனை வரும் வைகை
வரும் பொருணை வரும்

பெண் : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே

ஆண் : காதலி அருமை
பிரிவில் மனைவியின்
அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய்
கோடையிலே

ஆண் : வெட்கம் வந்தால்
உறையும் விரல்கள்
தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று
வாடையிலே

ஆண் : { தண்ணீர் குடத்தில்
பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில்
முடிக்கிறோம் ஓஹோ } (2)

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : வண்ண வண்ண
பெண்ணே வட்டமிடும்
நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு

ஆண் : ஹோ.. மெல்லிசைகள்
படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது
நங்கையின் குணமே

ஆண் : { சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே } (2)

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

ஆண் : தேன்கனியில்
சாராகி பூக்களிலே
தேனாகி பசுவினிலே
பாலாகும் நீரே

ஆண் : தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும்
பெண்ணே

ஆண் : பூங்குயிலே
பூங்குயிலே பெண்ணும்
ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண்
நினைத்தால் கரைகள் யாவும்
கரைந்து போக கூடும்

ஆண் : நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே அடி நீயும்
பெண்தானே

ஆண் : ஒன்றா இரண்டா
காரணம் நூறு கேட்டால்
சொல்வேனே நீ கேட்டால்
சொல்வேனே

ஆண் : { தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா } (2)

 

5.  சின்னச் சின்ன பாடல் வரிகள்

 


ஆண் : கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
கண் கண் கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது

ஆண் : ஒரு துளி
இரு துளி சில துளி
பல துளி படபட
தடதட சடசடவென
சிதறுது

ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

ஆண் : சிறு பூவினிலே
விழுந்தால் ஒரு தேன்
துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்து எனவே முதிர்வாய்

ஆண் : பயிர் வேரினிலே
விழுந்தால் நவதானியமாய்
விளைவாய் என் கண்விழிக்குள்
விழுந்ததனால் கவிதையாக
மலர்ந்தாய்

ஆண் : அந்த இயற்கை
அன்னை படைத்த ஒரு
பெரிய ஷவர் இது அட
இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை
இந்த மழை கண்டறிந்து
சொல்லியது

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ

ஆண் : மழை கவிதை
கொண்டு வருது யாரும்
கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க
வேண்டாம்

ஆண் : இது தேவதையின்
பரிசு யாரும் திரும்பிக்
கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

ஆண் : அந்த மேகம்
சுரந்த பாலில் ஏன்
நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
{
நீ கண்கள் மூடிக்
கரையும்போது மண்ணில்
சொர்க்கம் எய்துவாய் } (2)

ஆண் : ஓஹோ
ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஹோ ஓஹோ
ஓஓஹோ

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)

 

 

6.  ஒஹோ மேகம் வந்ததோ பாடல் வரிகள்


 

பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்

பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ

பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

விஷ்லிங் : …………………….

பெண் : யாரும் சொல்லாத
காவியம் ஆடை கொண்டிங்கு
ஆடுது

பெண் : நேரம் வந்தாலென்ன
பொன்னோவியம் வண்ணம்
மாறாமல் மின்னுது

பெண் : நான் பெண்ணானது
கல்யாணம் தேடவா

குழு :  கண்ணாளன்
வந்து பூமாலை போடவா
ஹே அம்மாடியோ பெண்
பார்க்கும் நாடகம்

பெண் : யார் வந்தாலுமென்ன
திரும்பாது ஞாபகம் பூவிலங்கு
தேவையில்லையே

குழு : …………………………….

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : கால்கள் எங்கேயும்
ஓடலாம் காதல் இல்லாமல்
வாழலாம்

பெண் : வண்ண மின்னல்களாய்
நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம்
பாடலாம்

பெண் : நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்

குழு : வா செவ்வானம்
இன்று ஜிவ்வின்று ஏறலாம்
நாம் எல்லோருமே செம்மீன்கள்
ஆகலாம்

பெண் : வா நீரோடை
எங்கும் வெள்ளோட்டம்
போகலாம் வாழ்க்கை என்ன
வாழ்ந்து பார்க்கலாம்

குழு : …………………………….

பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்

பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ

பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

குழு : …………………….

 

பெண் : நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ

பெண் : { மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் } (2)

பெண் : ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட
பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : கிலி கிலி கிலி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா
ஆஆ

பெண் : வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன்

பெண் : மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்

பெண் : ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை
முட்டும்

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ

பெண் : கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே

பெண் : இந்த செல்ல கிளி
மழை மேக துளி இந்த
செல்ல கிளி மழை மேகம்
விட்டு துள்ள துள்ளி

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நாரே நாரே
நா ரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...