Saturday, 25 September 2021

 

அழகாய் பூக்குதே சுகமாய் பாடல் வரிகள்


 

பெண் : { அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே } (2)

பெண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஓஹோ கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே
ஓஹோ

ஆண் : இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஓஹோ ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஓஹோ

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே

பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ

ஆண் : சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ

பெண் : நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே

ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
ஆண் & பெண் : அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

ஆண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
பெண் : காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...