Saturday, 11 September 2021

 

ஆனந்த குயிலின் பாடல் வரிகள்


 

ஆண் : { ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே } (2)
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது
உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா

பெண் : ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே

ஆண் : பூமி எங்கும் கண்டதில்லை
பாசத்தை உன்போலே

பெண் : வேறெதுவும் தேவை
இல்லை அன்புக்கு முன்னாலே

ஆண் : நெஞ்சுக்குள்ளே பூ மலரும்
வீட்டுக்குள் வந்தாலே

பெண் : நிம்மதியில் கண்வளரும்
பாட்டுக்கள் தந்தாலே

ஆண் : இந்த சொந்தங்கள் போதுமே
எங்கள் இன்பங்கள் கூடுமே

பெண் : அன்பென்னும் தீபம்
ஏற்றிய வீடும் தெய்வத்தின்
ஆலயம்தான்

ஆண் : வீடு என்றால்
மோட்சம் என்றால் வீடு
கண்டோம் நேசத்திலே

பெண் : ………………………………..
ஆண் : அடேங்கப்பா
பெண் : ………………………………..

பெண் : அன்பினிலே அன்பினிலே
ஆலயம் கண்டேனே அண்ணன்களின்
கைகளிலே ஜீவனும் நான்தானே

ஆண் : பாசத்திலே வாசம்
தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும்
வீணையும் நீதானே

பெண் : சிலா் வேதம்
பாடலாம் சிலா் கீதை
தேடலாம் நான் கண்ட
வேதம் நான் கண்ட கீதை
அண்ணனின் வாா்த்தைகள் தான்

ஆண் : வானில் நிலா
தேய்ந்திடலாம் பாச
நிலா தேய்ந்திடுமோ

பெண் : ஆனந்த
குயிலின் பாட்டு
ஆண் : தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே
பெண் : பூக்களில்
நனையும் காற்று
ஆண் : தினம் எங்களின்
தோட்டத்திலே

பெண் : கிளிகளின் கூண்டுக்குள்ளே
புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே

ஆண் : கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா

ஆண் & பெண் : ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே பூக்களில்
நனையும் காற்று தினம்
எங்களின் தோட்டத்திலே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...