Wednesday, 22 September 2021

 

 பூப்போல தீப்போல பாடல் வரிகள்


 

பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான்
பாடும் பாட்டாக வந்தாள்

கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தான்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பூவுக்குள்ளே பிறந்ததால்

, வாசங்களால் பேசுகிறா


வெண்ணிலவில் வளர்ந்ததால் ,
வெளிச்சம் கோடி வீசுகிறாய்

மங்கையின் கன்னத்தில் மஞ்சளின்
வண்ணங்கள் வந்தது எப்படியோ

மாலையின் வெயிலும் காலையின்
வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ

அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம்
என்று நான் வாழ்ந்து வந்தேன்

இன்று ஆண் களே நூலகம் கண்களே
புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை

கன்னக்குழி அழகிலே
தப்பித்து போனது யாருமில்லை

சோழியை போலவே தோழி நீ
சிறிது சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட
மனதில் சாவியை போடுகின்றாய்

ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள்
சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள்
கண்டிட இதயம் நொறுங்குதே

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...