Wednesday, 8 September 2021

 

Anthi Nera Thendral Katru Song Lyrics In Tamil



 

ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

ஆண் : தாலாட்ட அன்னை உண்டு
சீராட்டத் தந்தை உண்டு
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : ஆராரோ…..ஆரிராரிராராரோ.
ஆரிராராரோ…..ஆரிராரிராராரோ

ஆண் : ஆராரோ…..ஆரிராரிராராரோ.
ஆரிராராரோ…..ஆரிராரிராராரோ

ஆண் : உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு

ஆண் : தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...