Friday, 13 August 2021

 

திருமண மலர்கள் பாடல் வரிகள்

 


பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பெண் : பிறந்த இடம்
புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை

பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

பெண் : தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு

பெண் : மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

பெண் : அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை

பெண் : போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு
தூரம் இல்லை

பெண் : இப்படி ஓர் நல்லுறவு
வாய்த்திடுமா
வீட்டுக்குள்ளே விண்மீன்கள்
காய்த்திடுமா

பெண் : திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

பெண் : கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள்
யார்க்கு உண்டு

பெண் : மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு

பெண் : பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே
உறவானவன்

பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்

பெண் : தெய்வங்களும் எங்களைதான்
நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல்
வாசிக்குமே

பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பெண் : பிறந்த இடம் புகுந்த இடம்
வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...