Friday, 27 August 2021

 

Kadhala Kadhala Song Lyrics in Tamil



பெண் : காதலா காதலா
காதலின் சாரலா காதலா
காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களா

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ

பெண் : இதயத் துடிப்பினில்
ஓசையில்லை எடுத்துச்
சொல்லவும் பாஷையில்லை

ஆண் : இதற்குமுன்
இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள்
வீசவில்லை

பெண் : தனிமையில்
இன்று நான் நகம்
கடித்தேன் அடிக்கடி
என்னை நான் தினம்
ரசித்தேன்

ஆண் : கனவினில்
உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான்
அடம்பிடித்தேன்
பெண் : ஏனிந்த மாற்றமோ

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா

குழு : ……………………..

ஆண் : பெருகிப் பெருகி
ஒரு அலையானேன்
உருகி உருகி பனித்
துளியானேன்

பெண் : பறந்து பறந்து
ஒரு சிறகானேன் நனைந்து
நனைந்து புல்வெளியானேன்

ஆண் : பூமியும் இங்கு
பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று
என்னை வளைப்பதென்ன

பெண் : மலர்களில்
எல்லாம் கண் முளைப்பதென்ன
ரகசியம் சொல்லி என்னை
ரசிப்பதென்ன

ஆண் : ஏனிந்த மாற்றமோ

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா
பெண் : தீயிலே தென்றலாய்
வாழ்கிறேன் காதலா
ஆண் : கண்களா தூண்டிலா
கண்களா தூண்டிலா
பெண் : மாறினேன் மீன்களா

ஆண் : காதலா காதலா
காதலின் சாரலா
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...