Tuesday, 24 August 2021

 நன்றி சொல்லவே பாடல் வரிகள்


 

நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே

ராசி இல்லை இவள் என
பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர்
உன்னை வாட்டிய போது

சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட

போதும் போதும்
வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும்
போது நானும் அணைத்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே

சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்

வாழும் வரை நிழல்
என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை
உனை நான் பிரியேனே

திசையறியாது நானே
இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே

நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே


No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...