Monday, 16 August 2021

குருக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்

 

குருக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்

 


ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

பெண் : ஒரு கண்ணில் நீா்
கசிய உதட்டு வழி உசிா் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

பெண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த
மாதிாியே கண்ணுக்குள்ள
நொழஞ்சு உறுத்தறியே

ஆண் : கொடியவிட்டு குதிச்ச
மல்லிகையே ஒரு மொழியில்
சிாிச்சு பேசறியே

பெண் : வாயி மேல வாய
வெச்சு வாா்த்தைகளை
உறிஞ்சிபுட்ட விரல வெச்சு
அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம்
இன்னும் போகல

ஆண் : அடி ஒம்போல
செவப்பு இல்ல கணுக்கால்
கூட கருப்பு இல்ல நீ தீண்டும்
இடம் தித்திக்குமே இனி பாக்கி
ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
கொலுசுக்குள் மணியாக என்னக்
கொஞ்சம் மாத்து தாயே

ஆண் : ஒரு தடவ இழுத்து
அணைச்சபடி உயிா் மூச்ச
நிறுத்து கண்மணியே

பெண் : ஒம்முதுக தொலைச்சி
வெளியேற இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே

ஆண் : மழையடிக்கும் சிறு
பேச்சு வெயிலடிக்கும் ஒரு
பாா்வை ஒடம்பு மண்ணில்
புதையிற வரையில் உடன்
வரக் கூடுமோ

பெண் : உசிா் என்னோட
இருக்கயில நீ மண்ணோட
போவதெங்கே அட உன்
ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம்
கூடக் குழம்புமைய்யா

ஆண் : குருக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

பெண் : உன்ன கொஞ்சம்
பூசுவேன் ஐயா

ஆண் : உன் கொலுசுக்குள்
மணியாக என்னக்
கொஞ்சம்

பெண் : மாத்துவேன் ஐயா

ஆண் : ஒஹோ ஓஓஓ…..
ஒஹோ ஓஓஓ…..

பெண் : ஒஹோ ஓஓஓ…..
ஒஹோ ஓஓஓ…..

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...