Monday, 16 August 2021

மான் குட்டியே பாடல் வரிகள்

 

மான் குட்டியே பாடல் வரிகள்


 

ஆண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

ஆண் : உன் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து என் மனசுல
தெருக்கூத்து உன்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்து

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

பெண் : உன்னால
உன்னால எம் மனசு
உன்னால தறியில்
ஓடும் நாடா போல
ஏன் ஓடுது அது ஏன்
ஓடுது

ஆண் : உன்னால
உன்னால உன்னோட
நெனப்பால கண்ணுக்குள்ள
மெளகா வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது

 

பெண் : இது பஞ்சலோக
மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்த

ஆண் : நீ செக்கச் செக்க
செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த

பெண் : நீயும் நானும்
தான் ஒன்னா திரியிறோம்
ஆண் : தீயே இல்லையே
ஆனா எரியிறோம்

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
ஆண் : உன் மேனி தான்
ஒரு பூந்தொட்டியே

ஆண் : உன்னோடும்
என்னோடும் உடம்போடு
வேர்த்தாலும் வேர்த்திடாத
இடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும்

பெண் : ஆணோடும்
பெண்ணோடும் வேர்க்காத
இடம் என்ன உதட்டு மேல
வேர்க்காதைய்யா நீ நம்பணும்
அத நீ நம்பணும்

ஆண் : நீ அங்கக்
கொஞ்சம் காட்டி
இங்கக் கொஞ்சம்
பூட்டி பாதி உயிர்
எடுக்காதே

பெண் : என்ன கட்டிக்
கட்டிப் புடிக்க கண்ட
இடம் கடிக்க உத்தரவு
கேட்காதே

ஆண் : அசந்தா
போதுமே அரைச்சி
பார்க்கலாம்
பெண் : கசந்தா
போய்விடும் கலந்தே
பார்க்கலாம்

ஆண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

பெண் : என் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து உன் மனசுல
தெருக்கூத்து என்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து உன் நெஞ்சுல
புயல் காத்து

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...