Thursday, 5 August 2021

அன்பே பேரன்பே பாடல் வரிகள்

 

அன்பே பேரன்பே பாடல் வரிகள்


 

ஆண் : அன்பே…..அன்பே அன்பே அன்பே
அன்பே…..அன்பே அன்பே அன்பே
பேரன்பே…..பேரன்பே பேரன்பே
பேரன்பே…..பேரன்பே பேரன்பே

ஆண் : ஹோ ஹோ

பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்

பெண் : அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா….ஈர்க்குமாஆஅ
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா….தோற்குமா

ஆண் : மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ

ஆண் : திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே….தூண்டுதே

பெண் : ஆஅ….ஆஅ….
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே

பெண் : தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஆண் :  கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்.
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்.
ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்

இருவர் : அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே….
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

ஆண் : ஹோ ஹோ
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...