Monday, 23 August 2021

 

இணையே பாடல் வரிகள்


 

ஆண் : இணையே என்
உயிர் துணையே உன்
இமை திறந்தால் நான்
உறைவது ஏனடி அழகே
என் முழு உலகம் உன்
விழிகளிலே கண்
உறங்குது பாரடி

ஆண் : அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

பெண் : இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான்
கரைவது ஏனடா யுகமாய்
கை விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான்
உணர்வது ஏனடா
இணையே

ஆண் : மையல் காதலாய்
மாறிய புள்ளி என்றோ
மனம் கேட்குதே
பெண் : காதல் காமமாய்
உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர்
வேர்க்குதே

ஆண் : உடல் மேல்
பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம்
செய்தாய்
பெண் : எந்தன் சேவைகள்
எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும்
தந்தாய்

ஆண் : இணையே என்
உயிர் துணையே உன்
இனிமையிலே நான்
கரைவது ஏனடி

பெண் : யுகமாய் கை
விரல் பிடித்து நாம்
நடப்பது போல் நான்
உணர்வது ஏனடா

ஆண் : அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே

ஆண் & பெண் : இணையே
என் உயிர் துணையே உன்
இனிமையிலே நான் கரைவது
ஏனடி யுகமாய் உன் விரல்
பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

ஆண் : இணையே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...