Tuesday, 6 July 2021

சத்தம் இல்லாத பாடல் வரிகள்

 

சத்தம் இல்லாத பாடல் வரிகள்



சத்தம் இல்லாத பாடல் வரிகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சீ

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவை கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியை கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியை கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியை கேட்டேன்
தலையை கோதும் விரலை கேட்டேன்
நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீல குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருள புல்வெளி கேட்டேன்
தொட்டு படுக்க நிலவை கேட்டேன்
எட்டி பறிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவை கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவை கேட்டேன்
வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயர கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையை கேட்டேன்
உள்ளங்காலில் நதியை கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயில கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பை கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழ கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளை கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலை கேட்டேன்
பாரதியாரின் சொல்லை கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லை கேட்டேன்
மாயக் கண்ணன் குழலை கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியை கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றை கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையை போன்ற பொறுமையை கேட்டேன்
புல்லை போன்ற பணிவை கேட்டேன்
புயலை போன்ற துணிவை கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய் பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழ கேட்டேன்
குறைந்தபட்ச அன்பை கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...