Tuesday, 13 July 2021

நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடல் வரிகள்

 

நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடல் வரிகள்

 


ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

ஆண் : வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

ஆண் : உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்

ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ

ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்…..

ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

ஆண் : மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்க்கிறேன்

ஆண் : நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ

ஆண் : இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டு வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்

ஆண் : ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இனையுமே

ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

ஆண் : வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

ஆண் : உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

ஆண் : நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...