Sunday, 27 June 2021

Vaarayo Vaarayo Song Lyrics

 

              Vaarayo Vaarayo Song Lyrics

 


வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம்
காதல் யாவும் தேன்தான்

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

லைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே

நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

வாராயோ வாராயோ மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...