Tuesday, 10 August 2021

 

பூப்போல தீப்போல பாடல் வரிகள்


 

ஆண் : பூப்போல தீப்போல
மான்போல மழைபோல
வந்தாள் காற்றாக நேற்றாக
நான் பாடும் பாட்டாக வந்தாள்

ஆண் : கனவுக்குள் அல்ல
கற்பனை அல்ல வரமாக
ஸ்வரமாக உயிா் பூவின்
தவமாக வந்தாள்

ஆண் : அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : ……………………………….

ஆண் : பூவுக்குள்ளே பிறந்ததால்
வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளா்ந்ததால்
வெளிச்சம் கோடி வீசுகிறாய்

ஆண் : மங்கையின் கன்னத்தில்
மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும்
எப்படியோ

ஆண் : மாலையின் வெயிலும்
காலையின் வெயிலும் சோ்ந்ததால்
இப்படியோ

ஆண் : அடி பூமியே நூலகம்
பூக்களே புத்தகம் என்று நான்
வாழ்ந்து வந்தேன்

ஆண் : இன்று பெண்களே
நூலகம் கண்களே புத்தகம்
உன்னிடம் கண்டு கொண்டேன்

ஆண் : அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : ……………………………….

ஆண் : புன்னகையே போதுமடி
பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து
போனது யாருமில்லை

ஆண் : சோழியை போலவே
தோழி நீ சிாித்து சோதனை
போடுகின்றாய்

ஆண் : நாழிகை நேரத்தில்
தாழிட்ட மனதில் சாவியை
போடுகின்றாய்

ஆண் : ஒரு ஆயிரம்
கோடிகள் யுத்தங்கள்
சந்திக்க துணிவும் இருக்குதே

ஆண் : உன் பாா்வைகள்
மோதிட காயங்கள் கண்டிட
இதயம் நொறுங்குதே

ஆண் : அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : ……………………………….

 

No comments:

Post a Comment

Thangapoovey Song Lyrics

 Thangapoovey Song Lyrics ஆண் : தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன் நானே ஹம்மிங் : ஹே….தந்தானே தந்தானே ஆண் : தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன்...